பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருக்கின்ற காரணத்தால், பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தப்படும்.

அதன் பகுதியான பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சங்குபேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின் நகர், பாலக்கரை, நான்கு ரோடு, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்கு மாதவி, வடக்கு மாதவி சாலை, சிட்கோ, துறையூர் சாலை, அண்ணாநகர், கேகே நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம், இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, அருமடல் சாலை, எளம்பலூர், மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9:45 முதல் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பின்னர் பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு மின் விநியோகம் வழங்கப்படும் என பெரம்பலூர் நகரம் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.