மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடல் வாழ்வு சிகிச்சை பிரிவு வார்டு எண் 303 கடந்த ஒரு மணி நேரமாக மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளதால் நோயாளிகள் கடும் அவதி சிகிச்சை பிரிவில் மின்விசிறி மற்றும் சிகிச்சை உபகரணங்கள் வேலை செய்யாத நிலையில் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். முக்கியமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் கடுமையாக உள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மின்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.