
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு குழு சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் வாசகங்கள் எழுதிய பேனர்கள் உள்ளிட்டவைகளுடன் சோழவந்தானின் முக்கிய வீதிகளில் கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர். முக்கியமாக சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆரம்பித்த ஊர்வலம் பெரிய கடை வீதி, திரௌபதி அம்மன் கோவில் வடக்கு தெரு மாரியம்மன் கோவில் சன்னதி வட்ட பிள்ளையார் கோவில் காமராஜர் சிலை உள்ளிட்ட சோழவந்தான் முக்கிய பகுதிகளில் மாணவிகள் ஊர்வலமாக சென்று சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி சென்றனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியை தீபா மற்றும் ஆசிரியை பாண்டியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
