நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 40 சதவீதம் நிலக்கரியிலிருந்து பெறப்படுகிறது. கோடையை முன்னிட்டு ஏற்பட்டுள்ள வெப்ப அளவு உயர்ந்துள்ளது. இதனால் மின் தேவையும் அதிகரிக்கின்றது. நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மின் வினியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் இருளில் மூழ்கும் நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் தொழிற்சாலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 4 யூனிட்டுகளில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.