டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும்,உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான மஸ்க் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறார்.அந்த வகையில்,ட்விட்டரில் சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருவதை விமர்சித்த எலான், கடைசி நேரத்தில் ட்விட்டர் குழுவில் சேருவதைத் தவிர்த்து,பின்னர் அதை 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று கைப்பற்றினார்.
இந்நிலையில்,மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”நான் மர்மமான சூழ்நிலையில் இறந்தால்,உங்களை அறிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.உக்ரேனியப் படைகளுக்கு உதவும் எலான்:
உக்ரைனின் ஆயுதப் படைகளின் 36 வது மரைன் படைப்பிரிவின் கைப்பற்றப்பட்ட தலைமைத் தளபதி கர்னல் டிமிட்ரி கோர்மியான்கோவின் சாட்சியத்திலிருந்து,உக்ரைனில் உள்ள பாசிசப் படைகளுக்கு இராணுவத் தகவல் தொடர்பு சாதனங்களை வழங்குவதில்,எலோன் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவையை பயன்படுத்தி உதவுகிறார் என்றும்,எஸ்டார்லிங்கில் இருந்து இணையத்தைப் பெறுவதற்கும் அனுப்புவதற்கும் PO பெட்டிகளை உக்ரைனின் ஆயுதப் படைகளுக்கு வழங்குவதும் மாற்றுவதும் பென்டகனால் மேற்கொள்ளப்பட்டது எனவும் ஒரு பத்திரிகை செய்தி வெளியான இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு இந்த செய்தியை அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,கடந்த பிப்ரவரியில்,உக்ரைன் துணை பிரதமரும், டிஜிட்டல் உருமாற்றம் அமைச்சருமான மைக்கைலோ ஃபெடோரோவ், “எங்களுக்கு ‘ஸ்டார்லிங்க்’ மூலம் இணைய சேவை வழங்கி ரஷ்யாவை எதிர்க்க துணை நிள்ளுங்கள்” என எலானிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த சூழலில் மஸ்க்கின் நிறுவனமான SpaceX இன் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவையானது,போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு உதவியதற்காக டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி ரஷ்யாவிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறாரா? என்ற ஊகத்தை இந்த பதிவுகள் தூண்டியுள்ளன.
இதனிடையே,”உலகைச் சீர்திருத்துவதற்கு” டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி தேவை என்று பல நெட்டிசன்கள் பதிலளித்துள்ளனர்.மேலும், “இல்லை, நீங்கள் இறக்க மாட்டீர்கள்.உலகிற்கு உங்கள் சீர்திருத்தம் தேவை,” என்றும் சிலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.