• Thu. Oct 10th, 2024

திமுக ஆட்சியில் தான் மின்வெட்டு.. குறைகூறும் முன்னாள் அமைச்சர் … அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்..

Byகாயத்ரி

Apr 26, 2022

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, “நிர்வாகத்தில் உள்ள தவறுகளால் மின் வெட்டு ஏற்படுகிறது.

முன்பு அணிலால் மின் வெட்டு ஏற்பட்டதாக தெரிவித்த அமைச்சர் இப்போது நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படுவதாக கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வது..?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “திமுக ஆட்சி அமைந்தவுடன் மின்வெட்டு என்ற மாய தோற்றத்தை உருவாக்கினர். இரண்டு நாட்களில் இந்த மின்வெட்டு சரி செய்யப்பட்டது.கடந்த ஆட்சியில், 2018-ல் 59 மணி நேரம் 58 நிமிடங்களும், 2019-ல் 39 மணி நேரம் 20 நிமிடங்களும், 2020-ல் 32 மணி நேரம் 80 நிமிடங்களும், 2021-ல் தொடர் மின் வெட்டும் இருந்தது. அதேபோல், 2018-ல் நுகர்வோர் பற்றாக்குறை 76.91 மில்லியன் யூனிட் இருந்தது.முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் மின்வெட்டு, மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை. கடந்த காலங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. தற்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இரவில் கனவு கண்டாலும், பகலில் கனவு கண்டாலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியில் மின்வெட்டு இருக்காது. அடுத்த 5 ஆண்டுகளில் மின் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்த வழிகாட்டு நெறிமுறை முதலமைச்சர் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *