• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மரங்கள் வேரோடு சாய்ந்ததில் கோழிப்பண்ணை சேதம்..

ByP.Thangapandi

Jun 2, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு-யை அடுத்துள்ள உடையாம்பட்டியைச் சேர்ந்தவர் காசுகொடி., விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால், தனது நிலத்தில் கோழிப்பண்ணை வைத்து பிழைப்பு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.,

இந்த கோழி பண்ணையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக கோழிப்பண்ணையை சுற்றி இருந்த 50க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தும், கிளைகள் முறிந்தும் பண்ணையில் விழுந்து சோதப்படுத்தியது., இதில் பண்ணையில் இருந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட கோழிக் குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,

பண்ணையில் கோழிகளுக்கான செட் அமைக்க ஒரு செட்-க்கு சுமார் 10 முதல் 15 லட்சம் செலவு செய்து 5 செட்கள் அமைத்திருந்த நிலையில் 3 செட் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார்.,

மேலும் 15 நாட்களே ஆன கோழி குஞ்சுகளும் உயிரிழந்த நிலையில் செய்வதரியாது தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், கோழிப்பண்ணையை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே பிழைக்க முடியும் என வேதனையுடன் தெரிவித்தார்.,