

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாய்மொழி தேர்வுகள் நவம்பர் 10 முதல் 13 வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
துறை தேர்வுகளுக்கான இரண்டு மற்றும் மூன்றாம் நிலை மொழிப் பாடங்களுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு நாட்கள் நடைபெற இருந்த தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
