• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொங்கலுக்கு பின் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்பு..?

ByA.Tamilselvan

Dec 16, 2022

சட்டசபை கூட்டத்தொடர் பொங்கல் பண்டிகைக்கு பின் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் முதல் வாரம் கவர்னர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். இந்த முறை மழை பாதிப்பு தொடர்பான நிவாரணப் பணிகளை அரசு மேற்கொண்டு வருவதால் 2023 ஆம் ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடரை பொங்கலுக்கு பின்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் கூட்டத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார். தொடர்ந்து அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அத்துடன் அன்றைய சட்டசபைகூட்டம் நிறைவடையும். கவர்னர் உரையுடன் தொடங்கும் முதல் கூட்டத்தில், அரசின் ஒராண்டுக்கான செயல்திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும். இந்தி திணிப்பிற்கு எதிரான கருத்துகள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாகவும் உரையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.