


இயக்குனர் மணிரத்தினத்திற்கு காலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது.ஆனால் தற்போது அவக்கு கொரோனா இல்லை என தகவல்கள் வருகின்றன. காலை பாசிட்டிவ்…மாலைநெகட்டிவ் ..
இன்று காலை பிரபல இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர், சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.இதனால் இவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் விரைவில் இவர் உடல் நலம் தேறி வர வேண்டும் என தங்களுடைய வாழ்த்துக்ளை சமூக வலைத்தளம் மூலம் கூறி வந்தனர்.
ஆனால் இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், சற்று முன் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் இதனையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தற்போது கூறப்படுகிறது. எனவே தற்போது காய்ச்சல் மற்றும் உடல் சோர்வுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனால் மணிரத்னம் தனது வழக்கமான வேலைகளை கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

