

கன்னியாகுமரி மாவட்ட கடைவரம்பு பகுதிக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி திமுக அரசைக் கண்டிக்கும் வகையில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சி பிராந்தநேரி கடைக்கால் அருகில் நடைபெற்றது.
இந்தப் போராட்டம், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் தலைமையில், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ்.ஜெஸீம் முன்னிலையில் நடைபெற்றது. அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் இராஜபாண்டியன் வரவேற்று பேசினார்.