

மணிப்பூர் மாநிலம் கடந்த ஒரு மாதமாக பற்றி எரிகிறது. மாநில அரசு போராட்டத்தை அடக்காது கண்முடி மௌனம் காக்கிறது. மணிப்பூரில் இருந்து பல்வேறு அமைப்புகள் டெல்லி சென்று பிரதமரிடம் முறையிட பல நாட்கள் காத்துக் கிடந்தும், மணிப்பூர் மக்களை சந்தித்து பேசாத பிரதமர் அமெரிக்கா செல்வது முறையா.? என நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்கள்.
மணிப்பூர் மாநிலத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக நடந்துவரும் கலவரத்தை தடுக்க இதுவரை ஒன்றிய அரசு எவ்விதமான நடவடிக்கைகள் எடுக்காமல் மௌனம் காப்பது சொந்த நாட்டு மக்களின் துன்பம் போக்கால் சர்வாதிகார மனத்துடன் செயல் படுவதை கண்டிப்பதாகவும், மணிப்பூர் மக்கள் போராட்டத்தை சுமுகமாக தீர்த்து வைக்க கோரியும் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், கன்னியாகுமரி முன்னாள் மக்களவை உறுப்பினர் எ.வி.பெல்லார்மின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமோரோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அந்தோணி, அண்ணாதுரை, விஜய் மோகன் ஆகியோர் உரையாற்றினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஒன்றிய அரசின் செயலை கண்டித்து கோஷம் எழுப்பிய பின் ஆர்பாட்டத்தை நிறைவு செய்தனர். கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்திய பகுதியில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.