• Mon. Apr 29th, 2024

குமரியில்பேச்சிப்பாறை அணை நீரில் படகு பயணம் கடினமாக, மலைவாழ் மக்கள், மாணவர்களின் சோகம்.

குமரி மாவட்டத்தில் முக்கிய அணைகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு (1), சிற்றாறு (2) விவசாய நீர்ப்பாசனம் தேவைக்கானது.இதில் பேச்சிப்பாறை அணை முக்கிய நீராதாரமாக உள்ளது.பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் அளவு குறையும் போதெல்லாம், அணைக்கு அப்பால் உள்ள மலைவாழ் மக்களின் படகு பயணம் பாதிப்பு என்பதை கடந்து, மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்வது இந்த படகை நம்பித்தான்.

அண்மையில் குமரி மாவட்டத்தின் விவசாய தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில்.அணையின் மொத்தக்கொள்ளவான 48_அடியில் இருந்து தண்ணீர் மட்டம் 38_அடியாக குறைந்து விட்டதுடன், மலைவாழ் மக்களின் பயண தேவைக்கான படகில் ஆங்காங்கே ஓட்டை மற்றும் படகின் பல பகுதிகள் சிதலமடைந்து இருப்பதால் பயணத்திற்கு உகந்ததாக இல்லாது மட்டும் அல்ல எப்போது வேண்டுமென்றாலும் விபத்து ஏற்படலாம். ஒவ்வொரு நாளும் படகு பயணம் அச்சத்துடனே படகு பயணம் மேற்கொள்வது குறித்து மலைவாழ் பழங்குடி பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் படகு சிதலமடைந்த பகுதி வழியாக உள் புகும் நீரால் மாணவர்களின் உடை நனைவதை பற்றி கவலை இல்லை. பாடபுத்தகங்கள் நனைவதை பெரும் வேதனையாக தெரிவித்தார்கள். படகு பயணத்தின் போது பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கவேண்டும் என்பது அரசின் ஆணை.

பேச்சிப்பாறை பகுதி மலைவாழ் பழங்குடி மக்கள், மற்றும் மாணவர்கள் கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் பயணிக்கும் படகின் தரம் அற்ற தன்மை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் மெளனம் காப்பதின் மர்மம் புரியவில்லை என் தெரிவிக்கின்றனர்

இப்போது பயன் பாட்டில் இருக்கும் சிதலமடைந்த படகை அகற்றி விட்டு பாதுகாப்பான புதிய படகு,படகு பயணத்தின் போதான பாதுகாப்பு உடை மற்றும் மலைவாழ் மக்களுக்கு கட்டணம் இன்றி படகு இயக்கப்படவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் க்கு கோரிக்கையுடன், விபத்து நடந்த பின் நடவடிக்கை என்பதை கடந்து விபத்து நடக்காமல் தடுப்பதுதான் நல்ல நிர்வாகம் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *