• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் எதிர்க்கும் விஜய் ரசிகர்கள்

ByA.Tamilselvan

Dec 8, 2022

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு, துணிவு திரைப்படங்களின் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க வாரிசு, துணிவு திரைப்படங்களின் வெளியீடு குறித்து அதிக எதிர்பார்ப்புகள் உருவாகி வருகிறது. ரசிகர்கள் இணையத்தில் வாரிசு குறித்த தெலுங்கு ரிலீஸ் பற்றியே அதிகம் விவாதித்து வருகிறார்கள். இந்த நிலையில் இயக்குனர் பாஸ்கி டி.ராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ஹை 5 என்ற படத்தின் நிகழ்ச்சியில் கே.ராஜன் பேசியதாவது,
இப்போது ஒரே வீட்டில் ஆளுக்கொரு அறையில் இருக்கிறார்கள், வயதானவர்களை யாரும் கவனிப்பதில்லை. அந்த வலியை இந்த சினிமா சொல்கிறது. வாரிசு படத்துக்கு தெலுங்கில் திரையரங்கம் கிடைக்கவில்லை எனக் கவலைப்படுகிறார்கள். தெலுங்கில் கிடைக்காவிட்டால் உனக்கென்ன கவலை. இங்கே லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் இங்கேயா அந்தப் படத்தை எடுத்தார்கள். இங்கே இந்த மாதிரி சின்ன படம் தான் ஓட வேண்டும். நல்ல கதையைச் சொல்லும் இந்தப்படம் ஓட வேண்டும் என்றார். இந்தக்கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் பதிலடி கொடுத்து பதிவிட்டு வருகின்றனர்.