

அகில இந்திய வானொலியின் பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண சுவாமி காலமானார்.
மும்பையில் வசித்து வந்த அவர் இயற்கை எய்தினார்.அவர் தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர். பிறந்தது மும்பையில். பி.ஏ. ஆங்கிலம் படித்துள்ள அவர் தமிழில் செய்தி வாசித்துப் பிரபலமடைந்தார். 1962ஆம் ஆண்டு இவருக்கு அகில இந்திய வானொலி மையத்தில் வேலை கிடைத்ததுஅன்றையில் இருந்து தனது ஓய்வுநாள் வரை தனது காந்த குரலால் தொடர்ந்து செய்திகளை வாசித்துக் கொண்டே இருந்தார். இவருக்கு 2008ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இறப்புச் செய்தியை வானொலியில் தெரியப்படுத்திய குரல் சரோஜ் நாராயண சுவாமியுடையது. மேலும் பிரதமர் இந்திரா காந்தி என்பதற்குப் பதிலாக அன்னை இந்திரா காந்தி என மாற்றி செய்தி வாசித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.35 ஆண்டுகள் வானொலியில் பணிபுரிந்த பிறகும் ஒளிபரப்புத்துறைக்கு பங்களித்து வந்தார். தமிழ்ப் படங்கள், திரைப்படங்கள் பிரிவு ஆவணப்படங்கள், செய்தி இதழ்கள் ஆகியவற்றிற்குக் குரல் கொடுத்து வந்தார்.
