வீட்டில் பாக் கொடியை ஏற்றி அதிரச்சியை ஏற்படுத்திய இளைஞரால் பரபரப்பு .
நாட்டின் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் . அதன்படி பலரும் வீடுகளில் கொடி ஏற்றி வருகின்றனர். இந்நிலையில் ,உ.பியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வீட்டில் பாக் கொடியை பறக்க விட்டுள்ளார். இதை பார்த்து அதிரச்சியடைந்த அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த கொடியை அகற்றியதுடன் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.