• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஊட்டியில் புல்வெளிகளை பாதுகாக்கும் “பாப் அப்” முறை!

ஊட்டியில் தற்போது உறைபனி தாக்கம் அதிகமாக காணப்படுகிறது! திறந்தவெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை மீது பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்! இந்நிலையில், ஊட்டியில் பூங்காக்களில் மலர் செடிகளை உறைபணியில் இருந்து பாதுகாக்க பலவகையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன!

ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள வெவ்வேறு அலங்கார செடிகள், இந்திய வரைபடம் உள்ளிட்டவை இரவில் நெகிழி போர்வை கொண்டு மூடி பாதுகாக்கப்படுகின்றது! மேலும் உறைபனியால் கருகும் புல்வெளிகளை பாதுக்காக்க, ‘பாப்-அப்’ முறையில் ஸ்பிரிங்லர் மூலம் காலை மற்றும் மாலை தண்ணீர் தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது!