• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

‘பொன்னியின் செல்வன் 2’ திரை விமர்சனம்..!

Byவிஷா

Apr 28, 2023

பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் டைரக்டில் 2 பாகங்களாக உருவாகி அதன் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன்-2 படம் இன்று 28-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 கதைக்களம் பற்றி தற்போது காண்போம். கடலில் விழுந்து அருள்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் மறைந்து போனதாக தஞ்சைக்கு தகவல் கிடைத்த நிலையில், சுந்தரச்சோழர், குந்தவை என அனைவரும் மனமுடைந்து போகின்றனர். ஆதித்த கரிகாலனுக்கு அச்செய்தி தெரிந்ததும் தன் தம்பியின் மரணத்துக்கு நந்தினி தான் காரணம் என்று அவளை கொலை செய்ய படையோடு கிளம்பி தஞ்சை நோக்கி வருகிறான்.
கடலில் விழுந்த இருவரையுமே மந்தாகினி எனும் ஊமை ராணி (ஐஸ்வர்யா ராய்) காப்பாற்றுகிறார். மதுராந்தகன் மணிமகுடம் தனக்கு வரவேண்டும் எனும் முனைப்பில் சூழ்ச்சிகளை செய்ய ஆரம்பிக்க மறு முனையில் அமரபுஜங்காவிற்காக அரியணையை கைப்பற்ற முன்னாள் காதலன் ஆதித்த கரிகாலனை கொல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறாள் நந்தினி.
வந்தியத்தேவன் குந்தவையின் காதல் என்ன ஆகியது? அருள்மொழி வர்மனை திருமணம் செய்து கொண்டாரா வானதி? ஆதித்த கரிகாலனை கொன்றாரா நந்தினி..? கடைசியில் மணிமகுடம் யாருக்கு சென்றது? என்பதை சில எதிர்பார்க்காத ட்விஸ்ட்டுகள் உடன் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராயின் டபுள் ரோல் நடிப்புத்தான் 2ஆம் பாகத்தை ஒட்டுமொத்தமாக தாங்கி நிற்கிறது. கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷாவுக்கான போர்ஷன்கள் சரியாக அமைந்து இருந்தாலும், விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா தான் ரசிகர்களை அதிகம் கவர்கின்றனர்.