• Tue. Sep 10th, 2024

விஜய் டிவியின் இந்த வார நீயா? நானா?வில் சுவாராஸ்யமான விவாதம்..!

Byவிஷா

Apr 28, 2023

விஜய் டிவியில் வாரந்தோறும் ஒளிபரப்பாகி வரும் நீயா? நானா? வில் இந்த வாரம் ஆன்லைனில் பார்த்து திருமணம் செய்து கொண்டவர்கள், நேரில் பார்த்து திருமணம் செய்து கொண்டவர்கள் என இருதரப்பினரிடையே சுவராஸ்யமான விவாதம் நடைபெற உள்ளது.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ நீயா நானா. இந்த ஷோவில் இரண்டு தரப்பினர்களாக போட்டியாளர்கள் கலந்து கொண்டு சமூகத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களும் இந்த தளத்தில் கலந்துரையாடப்பட்டு பிறகு அந்த நிகழ்ச்சியில் அதற்கான தீர்வுகளும் வழங்கப்படும். மேலும் கோபிநாத் பல உண்மை சம்பவங்களுக்கு சார்பாக இருப்பதால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்த நிலையில் ஆன்லைன் மூலமாக காதலித்து திருமணம் செய்து கொள்பவர்கள் உண்மையாக இருக்க மாட்டார்கள் என்று விவாதிக்கப்பட உள்ளது. நேரில் பார்த்து திருமணம் செய்து கொண்டாலும் பொய்யாக தான் இருக்கிறார்கள் என்று இன்னொரு தரப்பினர் வாதாடுகிறார்கள். அதில் ஆன்லைனில் பார்த்து திருமணம் செய்தால் அது அவ்வளவு தூரம் உண்மையாக இருக்காது என்று பெண் ஒருத்தருக்கு மறுப்பு தெரிவித்தார் இதற்கு மறுப்பு தெரிவித்த மற்றொரு தம்பதி இவர் என்னை முழுமையாக காதலித்தார் என்றும் கூறியுள்ளார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு சுவாரசியமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *