• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

கரும்புடன் பொங்கல் பரிசு -வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ByA.Tamilselvan

Dec 28, 2022

பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்கிட கோரிய வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றும் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 22-ந்தேதி அறிவித்தது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது குறித்து பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரிய மனு வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.