• Fri. Dec 13th, 2024

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

பொங்கல் திருநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தில் பொங்கல் பரிசு தொகுப்பினை வட்டார வேளாண்மை ஆலோசனை குழு தலைவர் தாமரைபாரதி வழங்கி துவக்கி வைத்தார்.
தமிழக அரசின் சார்பாக நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார். அதே போல மாநில முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் அரிசி, சீனி, கரும்பு மற்றும் ரூபாய் 1000அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை ஆலோசனை குழு தலைவர் வழக்கறிஞர் தாமரைபாரதி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தென் தாமரை குளம் பேரூராட்சி கவுன்சிலர்கள் பூவியூர் காமராஜ், எட்வின் ராஜ், கூட்டுறவு சங்க செயலாளர் வைரம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.