பொங்கல் பண்டிகையின் எதிரொலியாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ மல்லிகை இன்று ரூ.3000க்கு விற்பனையாகிறது. முல்லை 2000, கனகாம்பரம் ரூ.1000, அரளி ரூ.450க்கும் என விற்பனை செய்யப்படுகிறது. இன்று மதுரை மல்லிகைப்பூ கிலோ 3,000 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி கிலோ 2000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. குறிப்பாக, நேற்று 1,000 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று கிலோ 3,000 ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், சம்பங்கி, வாடாமல்லி, கனகாம்பரம், ஜாதிமல்லி, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விலையும் உயர்ந்துள்ளதால் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருந்தாலும், மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி பூக்கள் வாங்க மக்கள் குவிந்து வருகின்றனர். ஆனால், தஞ்சை அய்யம்பேட்டை பகுதியில் செவ்வந்தி பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை பொங்கல் திருநாளை முன்னிட்டு செவ்வந்திப் பூக்களை அறுவடை செய்து வரும் நிலையில், ஒரு கிலோ செவ்வந்திப் பூவின் விலை ரூ.60 முதல் 70 ரூபாய் வரை மட்டுமே விலை போவதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.