• Wed. Dec 11th, 2024

வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை..!

Byவிஷா

Jan 13, 2024

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மொபைல் வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் இதற்கு ஏற்றார் போல் தங்களின் பணத்தேவையை திட்டமிட்டு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பொங்கலை கொண்டாடுவதற்கு நேற்று முதல் பொதுமக்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, இந்த பொங்கல் விடுமுறையை ஜாலியாக கொண்டாட சென்னை, திருச்சி, திருப்பூர், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு செல்கின்றனர்.

ஐந்து நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை:

1.சனி – ஜனவரி 13 (மாதத்தின் 2வது சனி)

2.ஞாயிறு – ஜனவரி 14 (போகி பண்டிகை)

3.திங்கள் – ஜனவரி 15 (தைப்பொங்கல்)

4.செவ்வாய் – ஜனவரி 16 (திருவள்ளுவர் தினம்)

5.புதன் – ஜனவரி 17 (உழவர் திருநாள்)