


சென்னை கேகே நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைமை அலுவலகத்தில் தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து பெண்களுக்கான கோல போட்டியும் நடை பெற்றது. இவ்விழாவில் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமை தாங்கி கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய விக்கிரமராஜா பேசும் போது..
ஜாதி மதம் மொழி கடந்து வேறுபட்டு ஒரே இனம் வணிகர் இனம் என்ற அடிப்படையில் உள்ளது தான் இந்த சமத்துவ பொங்கல். இந்த சமத்துவ பொங்கல் ஆனது ஒவ்வொரு ஆண்டும் சாமானிய வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளுடன் இனி ஒவ்வொரு ஆண்டும் இந்த சமத்துவ பொங்கல் கொண்டாட போகிறோம் . கொரோனாவை கடந்து வரக்கூடிய காலகட்டங்கள் நாம் மகிழ்ச்சியான ஒரு சமத்துவ பொங்கலை இனி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவோம் என்று கூறினார் .இவ்விழாவின் போது சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் என்.பி பாலன், மகளிர் அணி சித்ரா,இளைஞர் அணி கார்த்திகேயன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


