• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இந்திய விழிப்புணர்வு இயக்க அறக்கட்டளையின் சார்பாக பொங்கல் விழா

Byஜெ.துரை

Jan 9, 2023

சென்னை கோடம்பாக்கத்தில் இந்திய விழிப்புணர்வு இயக்கம் என்ற தனியார் அறக்கட்டளையின் மூலம் நடைபெற்ற பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், கலந்து கொண்டார்
சென்னை கோடம்பாக்கத்தில் இந்திய விழிப்புணர்வு இயக்கம் என்ற தனியார் அறக்கட்டளை மூலம் 5ம் ஆண்டு பொங்கல் விழாவை சென்னையில் உள்ள பல்வேறு கல்லுரி மாணவர்கள் கலந்து கொண்டு மண்பானையில் பொங்கல் வைத்தும் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம், கரகாட்டம், பறை போன்ற கலை நிகழ்ச்சிகளையும் மாணவர்கள் சிறப்பாக செய்து காட்டி அசைத்தியுள்ளனர். இவ் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், கலந்து கொண்டார்.
இது குறித்து தனியார் அறக்கட்டளை நிறுவனர் வெற்றிவேல் நமது செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது:
விவசாயிகளை போற்றுவோம் விவசாயிகளை காப்போம் என்ற விழிப்புணர்வை நகரத்தில் நாமும் தெரிந்த கொள்ளவே இந்த சமத்துவ பொங்கல் என்றும் பாரம்பரிய கலைகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கல்லூரி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் செய்து காட்டினார்கள். கொரனா என்ற கொடிய நோய்க்கு பிறகு இது மாதிரி சாதி மத பேதமின்றி இந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடப்பது என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் தொடர்ந்து பேசிய அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வெற்றிவேல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் இன்னும் கொடிய நோய்க்கு அடிமையாகாமல் இதுபோன்ற சமத்துவ பொங்கல் நடத்த வேண்டும் என்று என்றும் விவசாயிகள் போற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.