• Fri. Apr 19th, 2024

குளத்தை தூர் வாரிய
அமைச்சர்: ஐ.பி.,

” நான் அமைச்சராக இருந்தாலும், கவுன்சிலராக இருந்து நகரின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என, திண்டுக்கல்லில் ரூ. 45 லட்சம் செலவில் லப்பை குளம் தூர்வாரும் பணியை துவக்கி வைத்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார்.

திண்டுக்கல் மாநகராட்சி
35வது வார்டுக்கு உட்பட்டது, லப்பை குளம். இது பதினோரு ஏக்கர் பரப்பளவு கொண்டது. பரந்து விரிந்து காணப்படும் இக்குளத்தில் நீர் ஆதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில், கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. தவிர பல வருடங்களாக தூர் வாரப்படாததால், மண் மேடு அதிகளவு நிறைந்துள்ளது. இதனால் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீர் ஆதாரத்தை பேணி காக்கும் வகையில், இக்குளம் ரூ. 45 லட்சம் செலவில் தூர்வாரும் பணியை, அமைச்சர் ஐ. பெரியசாமி இன்று (பிப்.,7) துவக்கி வைத்தார். மாநகராட்சி மேயர் இளமதி, மாவட்ட ஆட்சியர் விசாகன், மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஐ. பெரியசாமி கூறியதாவது: திண்டுக்கல் நகருக்கு புதிதாக குடிநீர் திட்டம் கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நான் அமைச்சராக இருந்தாலும், கவுன்சிலராக இருந்து நகரின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். திண்டுக்கல் நகரில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவு ஆக்கிரமிப்பு உள்ளது. இது தொடர்பாக கூட்டம் நடத்தி ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பாளர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தயவு தாட்சண்யமின்றி அகற்றப்படும். இல்லை என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *