• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு..!

சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில் ரூ.5 மதிப்புள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகன், மகள் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார், மருமகன், மகள் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை மார்ச் 11 வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நிலமோசடி வழக்கில் ஜெய்குமாருக்கு ஜாமின் வழங்க புகார்தாரர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், ஜெயக்குமார் மனுவுக்கு பதில் தர காவல்துறை அவகாசம் கோரியதால் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்கில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.