• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவில் உள்ள பாஜக தலைமை தேர்தல் அலுவலகத்தில் பொன். இராதாகிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்தார்

நாளை(மார்ச்30)முதல் திறந்த வாகனத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்க போவதாகவும். வாக்கு பதிவுக்கு கால அவகாசம் மிகவும் குறைவாக இருப்பதால்.இரண்டு நாட்களுக்கு ஒரு சட்டமன்ற தொகுதி என பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும். கூட்டணி கட்சியை சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மே. 2-ம் தேதி குமரியில் பாஜகவுக்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும், எதிர்வரும் மே 5-ம்தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா. தக்கலை பகுதியில் மாலை 5மணிக்கு ரோட்ஷோவில் பங்கேற்கிறார் என்ற தகவலை தெரிவித்தார்.

தொடர்ந்த பொன். இராதாகிருஷ்ணன்.., குமரியில் எந்த மத வழிபாட்டுத் தலங்களிலும். ஒரு குறிப்பிட்ட வேட்ப்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவிப்பதை தேர்தல் ஆணையம் உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தவர், முன்னொரு சமயத்தில் ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சிகளில் நான் கிறிஸ்தவ மதம் பற்றி பேசிய, பேச்சின் சில பகுதிகளை எடிட் செய்து, கடந்த தேர்தலிலும், இப்போதும் சமூக வலைத்தளங்களில் பரப்பும் அநாகரிகமான செயலை கண்டித்தார்.

குமரியை சேர்ந்த அமைச்சர், காங்கிரஸ் வேட்பாளர் பற்றி வல்லவர்,நல்லவர் என வக்காலத்து வாங்கியுள்ளார். நடைபெறும் தேர்தல் மாவட்டத்தின் வளர்ச்சிக்குறிய தேர்தல் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என, பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் நாகர்கோவில் சட்டமன்ற பாஜக உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட பாஜகவின் பொருளாளர் முத்துராமன், மீனாதேவ், ஆகியோர் உடனிருந்தனர்.