

தமிழகத்தில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
ஏப்.,19ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.ஏப்.,4 ல் மதுரை மற்றும் சிவகங்கையிலும், 5ம் தேதி சென்னையிலும் அமித்ஷா பிரசாரம் செய்ய உள்ளதாக பா.ஜ., கூறியுள்ளது.

