ஸ்ரீவில்லிபுத்தூர் சர்க்கரை குளம் தெருவில் உள்ள புணரமைக்கப்பட்ட ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான குளத்தின் உட்பகுதியில் மாசுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பாக ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான சக்கரை குளம் தெருவில் உள்ள குளத்தை சமீபத்தில் ரூபாய் 55 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டது. புனரமைக்கப்பட்டுள்ளதால் தற்போது அக்குளத்தில் நீர் தேங்கியுள்ளது.

ஆனால் உட்பகுதியில் அதிகளவில் மாசுக்கள், பிளாஸ்டிக் பைகள் உட்பட்ட பல பழுதடைந்த பொருட்கள் கிடக்கிறது. எனவே அதனை உடனடியாக அகற்றி குளம் சுத்தமான முறையில் இருப்பதற்கு உதவ வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
