இன்றைய முக்கியச் செய்திகள்
◙ சென்னை பையன் குகேஷ் செஸ் போட்டியில் புதிய சாதனை படைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ஹோம் ஆப் செஸ் அகாடமி உருவாக்கப்படும் என்றும் அறிவிப்பு.
◙ ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்றும் பெரும்பான்மை ஆளும் பாஜக அரசிடம் இல்லை. பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே மசோதாவை தாக்கல் செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.
◙ சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.வடகடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல்.
◙ இட ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. பிரிவினர் வஞ்சிக்கப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு. நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவும் மாநிலங்களவையில் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல்.
◙ அருப்புக்கோட்டை அருகே கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால் பல நூறு ஏக்கரிலான பயிர்கள் சேதம்.மிளகாய், மல்லி செடிகள் சுவடே தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டதால் விவசாயிகள் கண்ணீர்.
◙ ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைப்பு. மசோதாவிற்கு ஆதரவாக 269 பேரும், எதிராக 198 உறுப்பினர்களும் வாக்களிப்பு.
◙ அம்பேத்கரின் பெயரை உச்சரிப்பது தற்போது பேஷனாகிவிட்டதாக உள்துறை அமித்ஷா சர்ச்சை பேச்சு. அன்னல் அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தல்.
◙ ரஷ்யாவின் அணுசக்தி மற்றும் ரசாயன ஆயுதப் படைப்பிரிவின் தலைவர் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழப்பு. உக்ரைன் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்யா திட்டவட்டம்.