• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகளை தடுத்து போராட்டத்தை நடத்திய அரசியல்வாதிகள் – அப்படித்தான் பள்ளிக்கு செல்வோம் என பேசி அதிரவைத்த மாணவிகளின் வீடியோ

ByP.Thangapandi

Jul 12, 2024

உசிலம்பட்டியில் பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகளை தடுத்து போராட்டத்தை நடத்திய அரசியல்வாதிகளிடம் – அப்படித்தான் பள்ளிக்கு செல்வோம் என பேசி அதிரவைத்த மாணவிகளின் வீடியோ வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கள்ளர் சீரமைத்துறை, ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வட் ப்ளாக் கட்சியினர் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்தனர்.

இந்நிலையில் இன்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை வாசலிலேயே தடுத்து நிறுத்தி வீட்டிற்கு திருப்பி அனுப்பிய சூழலில் உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவிகள் அரசியல் கட்சியினருடன் அப்படித் தான் பள்ளிக்கு செல்வோம், எங்கள் ஆசிரியர் எங்களை வர சொல்லியுள்ளார், எங்களை ஏன் தடுக்கிறீர்கள் என அதிரடியாக பேசி போலீசார் பாதுகாப்புடன் பள்ளிக்கு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.