• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஆரம்பம்

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 வரை நடைபெறும்.

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 வரை நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற உள்ளது.

இந்த மையங்களில் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழகத்தில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழகம் தொடர்ந்து 18 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.