• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

12 கிலோ கஞ்சா போலீசார் பறிமுதல்..,

ByR. Vijay

Apr 28, 2025

விசாகப்பட்டினத்தில் இருந்து ரயில் மூலம் நாகப்பட்டினத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சுப்பிரியாவிற்கு தகவல் வந்தது. இதையடுத்து இவரது தலைமையில் வெளிப்பாளையம் போலீசார் வெளிப்பாளையம் நாடார் குளத்தெருவில் ஒரு வீட்டில் நேற்று (27ம் தேதி) இரவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்பில் 12 கிலோ கஞ்சா விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் வெளிப்பாளையம் பச்சை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ரேவதி (37), ஆழியூர் அருகே கோயில் கடம்பனூரை சேர்ந்த பிரகாஷ் (30), இவரது மனைவி ரேணுகா (29) என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா வை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாகப்பட்டினத்தில் இருந்து ரயில் மூலம் பிரகாஷ் தனது மனைவி ரேணுகாவுடன் கஞ்சா கடத்திவந்து நாகை, திருவாரூர் பகுதியில் ரேவதி மற்றும் ரிக்கிப் பாண்டி, அருள்பிரகாஷ் ஆகியோர் உதவியுடன் விற்பனை செய்வது தெரிய வந்தது. இது தொடர்பாக இரண்டு பேரை தேடி வருகின்றனர்.