• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

பாலியல் புகாரில் சிக்கிய போலீஸ் அதிகாரி கோவையில் கைது !!!

BySeenu

Mar 15, 2026

கோவைப்புதூர் போலீஸ் பட்டாலியன் படைப் பிரிவில் பணி புரிந்த பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

கோவை புதூர் பகுதியில் தமிழ்நாடு 4 வது பட்டாலியன் படைப் பிரிவு உள்ளது இதில் கமாண்டாக காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்து செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அங்கு பணி செய்யும் பெண்கள் மற்றும் பெண் போலீசாருக்கு பல்வேறு பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் அவர் பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி பேசி உள்ளார். இது தொடர்பான புகார்கள் போலீஸ் உயரதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் போத்தனூரில் உள்ள கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர்.

தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். பாலியல் புகாரில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.