திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் அவுலியா தர்கா உள்ளது இந்த தர்காவில் தங்கி உள்ள அக்தர்கள் (பூசாரி)கள் ஏழு நாளுக்கு ஒரு முறை மாறுவது வழக்கம்.

இதன் தொடர்ச்சியாக இன்று (24.09.26)முறை தாரர் அத்தார் அப்பாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சமைத்து சாப்பிடுவதற்காக மலை மீது தக்காளி அரிசி வெள்ளைப் பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்களை கொண்டு செல்ல முயன்றுள்ளனர். மேலும் சமையல் செய்ய மின்சாதன அடுப்பு கொண்டு செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை
அப்போது மலைக்கு செல்லும் பாதையில் பாதுகாப்பில் உள்ள காவல்துறையினர் மேலே கொண்டு செல்லக்கூடாது என பள்ளிவாசல் நிர்வாகியை தடுத்து நிறுத்தினர்.

இதனால் கோபம் அடைந்த பள்ளிவாசல் நிர்வாகிகள் தொடர்ந்து இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பதாகவும், இதனால் மழை மீது உள்ள தர்காவின் சாவியை காவல் நிலையத்தில் ஒப்படைக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மீண்டும் அவர்கள் உணவுப் பொருட்கள் மற்றும் மின் அடுப்புடன் மலை ஏற வந்தபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்போது அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது .

அதைத் தொடர்ந்து காவல்துறையினர் மலை மீது உணவு சமைக்க கூடாது என உயர் நீதிமன்ற உத்தரவு இருப்பதாகவும் வேண்டும் என்றால் நீதிமன்றத்தை நாடி அதற்குரிய அனுமதி உத்தரவை பெற அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் மலைமீது உணவு சமைக்கும் பொருட்களை எடுத்துச் சொல்ல கூடாது என்றும் பேரிச்சம்பழம், பிஸ்கட் போன்ற உணவு பண்டங்களை மட்டும் எடுத்துச் செல்ல அறிவுறுத்தியதன் பெயரில் தயாரன உணவு பொருட்கள் பழங்கள் மட்டும் மலை மீது எடுத்துச் செல்லப்பட்டது.
உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று சமைக்க காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்கா சாவியை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரை சந்தித்து தங்கள் ஒப்படைக்க போவதாக தர்கா தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இறுதியாக திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பள்ளிவாசல் நிர்வாகிகள் நடத்தியதில் தற்போது தயாரான உணவு பொருட்களை மட்டும் எடுத்து மலைமேல் உள்ள சிக்கந்தர் அவுலியா தற்காவிற்கு பணியாளர்கள் சென்றனர்.




