• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் மரு. தாரேஸ் அகமது டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Sep 24, 2026

மதுரை மாநகராட்சி, மண்டலம் 3, வார்டு 50, சிம்மக்கல் LNP அக்ரஹாரம் தெருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

தொடர்ந்து, வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி, சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் கொசு உற்பத்தியாகாத வகையிலும் பராமரிக்குமாறு அறிவுறுத்தினார்.

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.