

மயிலாடுதுறையில் சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்பகை காரணமாக கொலை நடந்ததாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட .முட்டும வடக்குதெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் சாராயம் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. .
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறை முட்டம் பகுதியில் சாராய ரெய்டு நடத்தியது. இதில் சாராய வியாபாரி ராஜ்குமார் கைது செய்யப்பட்டார்.அவர் நேற்று முன்தினம் ஜாமீனில் . வந்துள்ளார். அப்போது சாராயம் விற்பதை தட்டிக் கேட்ட 17 வயது சிறுவன் சாராய வியாபாரிகளால் தாக்கப்பட்டன.
இதைத் தட்டிகேட்ட முட்டம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ஹரிஷ்(25), மற்றும் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியைச் சேர்ந்த பொறியில் கல்லூரியில் படிக்கும் மாணவன் ஹரிசக்தி (20) ஆகியோரை சாராய வியாபாரிகள் ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகிய மூவரும் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் இரண்டு வாலிபர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த . இரட்டை படுகொலை குறித்து பெரம்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.இந்த நிலையில் இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், , முன்பகை காரணமாகவே சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது ஒரே தெருவில் வசிக்கும் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறு தொடர்பாக நடந்த சம்பவம் என்றும், உண்மைக்கு புறம்பான தகவலை பரப்ப வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றவாளி ராஜ்குமார் என்பவரின் கூரை வீட்டினை எதிர்த்தரப்பினர் கொளுத்தியதுடன் தங்கதுரை, மூவேந்தன் ஆகிய இருவரது வீட்டில் உள்ள பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இரண்டு தரப்புகளைச் சேர்ந்தவர்களும் ஒரே சமூகத்தினர் என்பதால் சமூக பதற்றம் ஏதுமில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பூர் போலீசார் பத்துக்கும் மேற்பட்டோர் முட்டம் கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியுள்ளனர்.
இரட்டை படுகொலை செய்த ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் தங்கதுரை, மூவேந்தன் உள்ளிட்டோரை காவல்துறை கைது செய்துள்ளது.ஆனாலும், சாராய வியாபாரிகளுக்கு காவல் துறையினர் உடந்தையாக இருப்பதாகக் கூறி, கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை வாங்க மறுத்து மருத்துவமனையில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

