• Wed. Mar 26th, 2025

பேரழகனே…

வார்த்தை என்கிற வங்கக் கடலுக்குள்
அடங்கிடாத
மீப்பெருங் கவிதை அவன்..!

கவிஞர்களின் கவிதைக்குள்
வர மறுக்கும்
அற்புத வார்த்தை அவன்..!

அழகான பூவுக்குள்
அடக்கிடவியலாத
மகரந்த வாசம் அவன்..!

பரந்து விரிந்த வானத்தில்
கூடித்திரிகின்ற
நிழல் மேகம் அவன்..!

கொஞ்சி பேசிடும்
மழலையின் இதழ் விரியும்
புன்னகையின் அரசன் அவன்..!

புல்லாங்குழலின்
துளைகளுக்குள் நுழைந்திட்ட இயல்இசை கீதங்கள் அவன்..!

மெய்யுணர்ந்த பக்தைக்கு
வரம் தரும்
கடவுள் அவன்..!

மொத்தத்தில்
அவள் ரசித்து நேசிக்கும்
அளவிலா அழகியல் அவன்
அவன் அவள் பேரழகன்..!

கவிஞர் மேகலைமணியன்