• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

போக்சோ வழக்குகள் – முதலிடம் உ.பி. !!

ByA.Tamilselvan

Jul 30, 2022

கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் போக்சோ சாட்டத்தின் கீழ் 47,221 வழக்குகள் பதிவானதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய கூட்டத்தின்போது மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தேசிய குற்றப் பதிவியல் ஆணையம் சேகரித்த தகவல்களை வெளியிட்டார்.அதன்படி, 2020ஆம் ஆண்டில் நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் போக்சோ சாட்டத்தின் கீழ் 47,221 வழக்குகள் பதிவானதாக தெரிவித்தார். இதில், உத்தரப்பிரதேசம் 6,898 வழக்குகளுடன் முதல் இடத்திலும், 5,687 வழக்குகளுடன் மகாராஷ்டிரா 2ஆவது இடத்திலும் மத்தியப் பிரதேசம் 5,648 வழக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது.அதேவேளையில், உத்தரப்பிரதேசத்தில் தண்டனை வழங்கப்பட்ட விகிதம் 70.7 சதவீதமாகவும் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசத்தில் முறையே 30.9 சதவீதம், 37.2 சதவீதமாகவும் இருக்கிறது. நாட்டிலேயே மணிப்பூர் மாநிலம்தான், கடந்த மூன்று ஆண்டுகளாக 100 சதவீதம் குற்றங்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.