• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

காரில் நின்றபடி கையசைத்த பிரதமர் மோடி- வீடியோ

ByA.Tamilselvan

Nov 11, 2022

திண்டுக்கல் நகருக்கு வந்தடைந்த பிரதமர்மோடி காரில் நின்ற படி பொதுமக்கள் ,தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.
திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து இன்று பிற்பகல் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி திண்டுக்கல்லுக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கினார். அவரை முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அவர் சென்ற போது அவருக்கு பொதுமக்கள், கட்சியினர், உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அவர் காரில் இருந்து வெளியில் வந்து நின்று அவர்களுக்கு கையைத்தார்.