• Thu. Mar 28th, 2024

பிளஸ்-2 பொதுத்தேர்வு – விருதுநகர் முதலிடம்

ByA.Tamilselvan

May 8, 2023

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. தமிழில் 2 பேர் மட்டுமே 100க்கு 100 தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 690 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 15 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணக்கு பதிவியலில் 6573 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பாடப்பிரிவுகளில் 96.32% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வணிகவியல் பாடப்பிரிவுகளில் 91.63% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கலைப்பிரிவுகளில் 81.89%, தொழிற்பாடப்பிரிவுகளில் 82.11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயற்பியல் – 812 வேதியியல் – 3909 உயிரியல் – 1494 தாவரவியல் – 340 விலங்கியல் – 154 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *