இந்தியாவில் தற்போது 15 சதவீத பெண் விமானிகள் மட்டுமே இருக்கும் நிலையில் அதனை 50 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
உலக அளவில் பெண் விமானிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் பெண்களின் எண்ணிக்கை 15 சதவீதம் மட்டுமே உள்ளது. இதனை அடுத்து அதனை 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்
பெண்களை முன்னிலைப்படுத்தும் முயற்சிகளில் அனைவருக்கும் அதிகபட்ச வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று இந்த அரசு கொள்கை ரீதியில் முடிவு செய்திருப்பதாகவும் கூறினார். மேலும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு 12 வாரங்களில் இருந்து இருபத்தி ஆறு வாரங்களாக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.