• Wed. Jan 28th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்_ மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்ற திட்டம்..,

ByS.Ariyanayagam

Jan 28, 2026

திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் – சமயநல்லூர் தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்தமைக்கு ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

நான்கு வழிச்சாலையாக உள்ள திண்டுக்கல் – சமயநல்லூர் தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை (DPR) கோருவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் நிதின் கட்கரி-க்கு சு.வெங்கடேசன் எம்.பி நன்றி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் முதல் சமயநல்லூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை (NH-44) பகுதியை 4 வழிகளிலிருந்து 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முதற்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளது.