நாகர்கோவிலில் உள்ள புனித அல்போன்சா திருத்தலம் ஆலயம் விழாவின் 10_ம் நாளான இன்று (ஆகஸ்ட்-3)ம் தேதி தக்கலை மறைமாவட்டத்தில் இருந்து புனிதப் பயணம் காலை தொடங்கியது.

மறைமாவட்ட அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து இறைமக்கள் புனித அல்போன்சா திருத்தலம் நோக்கிய புனித பயணத்தில்.
அருட்பணியாளர்கள் பங்கேற்ற இறைமக்கள் முத்துக்குடையுடன் நடைபெற்ற ஊர்வலம், திருவிழா ஆலயம் முற்றத்தை வந்தடைந்தது.
இன்றைய நிகழ்வில் பேரருட்தந்தை தோமஸ் பெளவத்துப்பறம்பில் மேதகு ஆயர் மார் ஜார்ஜ் இராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

திருத்தேர் பவனி,நேர்ச்சை பவனி, நேர்ச்சை விருந்து ஆகியவை நடைபெற்றது. விழாவின் நிறைவாக ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது
விழாவின் நிறைவாக அருட்தந்தையர்கள்,அருட்சகோதிரிகள், இறைமக்கள் முன்னிலையில் திருக்கொடி இறக்கப்பட்டது.

புனித அல்போன்சா திருத்தல ஆலய விழாவில் பங்கேற்ற இறைமக்கள் அன்னை அல்போன்சாவின் ஆசி பெற்ற நிறைவில் கலைந்து சென்றார்கள்.