• Sat. Apr 20th, 2024

விழாவில் பங்கேற்ற நடிகை ராஷ்மிகாவின் புகைப்படங்கள் வைரல்…

Byகாயத்ரி

Jul 16, 2022

இளைஞர்களின் ஸ்வீட் கிரஷ் ஆன ராஷ்மிகா விழா ஒன்றில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். கன்னட நடிகையான ராஷ்மிகா கிரிக் பார்ட்டி எனும் கன்னட படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், அவரை மக்கள் மத்தியில் பேமஸ் ஆக்கியது தெலுங்கு சினிமா தான். குறிப்பாக கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் இவரது நடிப்பு வேறலெவலில் ரீச் ஆனது.

இதனால் அடுத்தடுத்து தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்தாண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். இதையடுத்து இவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது. அதன்படி மிஷன் மஜ்னு என்கிற படத்தில் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக நடித்து முடித்த ராஷ்மிகாவுக்கு, அப்படம் ரிலீசாகும் முன்பே அமிதாப் பச்சனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் இருவரும் இணைந்து குட் பாய் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளனர்.

இதுதவிர அவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ராஷ்மிகா, அதற்கு படு கவர்ச்சியான உடை அணிந்து வந்தது கவர்ச்சியில் அனைவரையும் திகைக்க வைத்துள்ளார். ரெட் ஹாட் உடையில் தெரிய அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *