• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சுஹாசினியின் குமரி ஆகும் ஆசையால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

Byதன பாலன்

Mar 11, 2023

சினிமாவில் கதாநாயகி வாய்ப்புக் கிடைக்கவும், கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளவும் இளம் நடிகைகள் ஆடை குறைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிடுவதை தினசரி பணியாக செய்து வருகின்றனர்.

61 வயதாகும் நடிகை சுஹாசினியை கதாநாயகியாக நடிக்க இனிமேல் யாரும் ஒப்பந்தம் செய்யப்போவதில்லை வயதானாலும் வாலிப எண்ணம் ஆழ்மனதில் ஆட்சி செய்யும் என்பார்கள். இன்றைய இளம் நடிகைகள் போன்று ஆடை குறைத்து இல்லாமல் முழுமையாகஆடை அணிந்து முகபாவங்களால் கிளாமர் புகைப்படம் எடுக்க முடியும் என்பதற்கு அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களுடன் அவரை பற்றிய முன்னோட்டம் இலவச இணைப்பாக கமல்ஹாசனின் உடன்பிறந்த சகோதரரான சாருஹாசனின் மகள் தான் சுஹாசினி மணிரத்னம் 1980 மற்றும் 1990 களில் தமிழில், விஜயகாந்த், ரஜினிகாந்த், சத்யராஜ் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சுஹாசினி.


நடிகை சுஹாசினி,தன்னுடைய சித்தப்பாவை தொடர்ந்து… 1980 ஆம் ஆண்டு வெளியான ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்துக்கே சிறந்த அறிமுக நடிகைக்காக தமிழ் நாடு ஸ்டேட் பிலிம் அவார்டுக்கு நாமினேட் செய்யப்பட்டார்.

மேலும், முதல் படத்திற்காக பிலிம் ஃபேர் விருதையும் பெற்றார்.
இந்த படத்தை தொடர்ந்து, குடும்பம் ஒரு கதம்பம், தெய்வ திருமணங்கள், பாலைவன சோலை, போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்தார். தென்னிந்திய மொழி படங்களை அடுத்து ஹிந்தி மற்றும் இங்கிலீஷ் போன்ற மொழிகளிலும் சுஹாசினி நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை சுஹாசினி இயக்குனர் மணிரத்னத்தின் படத்தில் பணியாற்றும் போது, இருவருக்கும் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறவே, இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

நடிகை என்பதை தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என திரையுலகில் தன்னுடைய பன்முக திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அதே போல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர்.
தற்போது இவருக்கு 61 வயது ஆகும் நிலையில், 25 வயது இளம் ஹீரோயினை போல்… பட்டு சேலையில் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் சில இதோ…