• Wed. Apr 24th, 2024

உளவியலை அறிவியல் அறிவுடன் இணைக்கும் மெமெரிஸ்-விமர்சனம்

Byதன பாலன்

Mar 11, 2023

“டைட்டிலைப் பார்த்ததும் ஏதோ நமது பழைய நினைவுகளை கிளறி விடும் படம் என நினைத்தால்…அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்குகிற படம்

இது பக்கா மனோதத்துவதிரில்லர். ஒரு மனிதனுக்குள் இருக்கும் நினைவுகளை அறிவியல் துணையுடன் மருத்துவர்மூலமாக அழித்து, வேறு பல புதிய நினைவுகளை சிந்திக்கும் சிறுமூளைக்குள்வைக்க முடியும் என்ற அதிர்ச்சி ஒருவரி கதையைமையக்கருவாக கொண்ட திரைப்படம் மெமெரிஸ்

கதை?

ஒரு டிவி சோ மூலமாக ஒருவனது வாழ்க்கையை நாயகன் வெற்றி சொல்கிறார். அந்தக் கதையில் வருபவரும் வெற்றி. அந்தக் கதையில் வெற்றி நான்கு கொலைகளை செய்கிறார். அவர் செய்த கொலைகளுக்கான காரணம் என்ன? உண்மையில் அந்தக் கொலைகளை அவர் தான் செய்தாரா? இல்லை அறிவியல் நிறைந்த மருத்துவம் அவர் நினைவில் அந்தக் கொலைகளை அவர் செய்ததாக புகுத்தி விட்டதா? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் முயற்சிதான் மீதிப்படம்

அபிநவ் ராமானுஜம் கெட்டப்பில் வெற்றி நடிப்பு நன்றாக எடுபட்டுள்ளது. ஹரிஸ் பேரடி தனது நடிப்பை வஞ்சகம் செய்யாமல் வழங்கியிருக்கிறார் அ நாயகிக்கு வந்துபோவதை தவிரபெரிய வேலை எதுவும் படத்தில் இல்லை.

திரில்லர் படங்கள் என்றால் இசை மூலம் தான் படத்தின் காட்சிகளை அதன் அதிர்வுத்தன்மையோடு கடத்த முடியும். அதை உணர்ந்து இசை அமைத்துள்ளார் கவாஸ்கர் அவினாஸ். படத்தின் ஒளிப்பதிவில் நல்ல சிரத்தை எடுத்து லைட்டிங் அமைத்துள்ளார் கேமராமேன்.

மனித நினைவுகளை மாற்றி வைத்து அதன்மூலம் மிகப்பெரிய குற்றச்செயல்கள் செய்ய முடியும் என யோசித்து ஒரு லைனைப் பிடித்த இயக்குநர்கள் ப்ரவீன் ஷ்யாம். நம் இந்தியச் சினிமா ரசிகனின் உளநிலை அறிந்து எமோஷனல் கனெக்டிங்கோடு திரைக்கதை அமைத்திருந்தால் நம் மெமெரிஸில் அழிக்க முடியாத படமாக இது அமைந்திருக்கும்.

இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு படத்தைப் புரிஞ்சிக்கணுமா என்ற அளவில் சற்றுத் திணற வைக்கும் திரைக்கதை தான் படத்திற்கு வில்லன். ஆனாலும் இந்த வித்தியாசமான முயற்சிக்காக படத்தை ஒருமுறை சினிமா ரசிகன்சிரத்தை எடுத்தேனும் பார்க்கலாம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *