• Fri. Apr 26th, 2024

மதுரையில் முதலமைச்சரின் 70 ஆண்டுகால பொது வாழ்க்கை குறித்த புகைப்படகண்காட்சி

ByKalamegam Viswanathan

Mar 27, 2023

தமிழ்நாடு முதலமைச்சர் 70 ஆண்டுகால பொது வாழ்க்கை குறித்த பிரமாண்டமான புகைப்படக் கண்காட்சியினை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.
நான்கு வாரங்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள் இடைநின்றவர்களாக கருதப்பட்டு அவர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர் பதிவு செய்ய வேண்டுமென கூறினார்.மதுரை நத்தம் சாலை யாதவா ஆண்கள் கல்லூரி எதிரே, மேனேந்தல் மைதானத்தில் , தமிழ்நாடு முதலமைச்சர், 70 ஆண்டுகால பொதுவாழ்க்கை பயணம் குறித்த பிரமாண்டமான புகைப்பட கண்காட்சியை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , முன்னிலையில் , பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பார்வயிட்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-
மதுரை மாவட்டத்தில், அமைச்சர் , திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட கழக செயலாளருமான மூர்த்தி, ஏற்பாட்டிலும் மிக சிறப்பான முறையிலே 12 ஆயிரம் சதுரடியில் அனைத்து தரப்பினரையும் கவருகின்ற வகையில் இப்புகைப்பட கண்காட்சி அமைந்துள்ளது. குறிப்பாக, ஒரு தலைவனுடைய வரலாறு என்பதைவிட ஒரு இனத்தினுடைய வரலாறு என்றுதான் கூறவேண்டும். ஏறத்தாழ 55 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர். இந்த இடத்திற்கு வருவதற்கு அவர் எவ்வளவு பாடுபட்டிருக்கிறார் உழைத்திருக்கிறார் இயக்கத்திற்காக மக்கள் போராட்டத்திற்காக சிறை சென்றது வரை மிக அழகாக காட்சிப்படுத்துகின்ற அந்த பணியில் முழுமையாக ஈடுபட்டிருக்கின்ற மாவட்ட அமைச்சர் அவர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுகள்.
அமைச்சர் மூர்த்தி, பொதுவாக இயக்கத்தைச் சார்ந்த எந்தவொரு நிகழ்வை நடத்துவதாக இருந்தாலும் அதை மிகப் பிரம்மாண்டமாக உள்ளுணர்வோடு அதை நடத்திக் காட்டக்கூடியவர். இப்புகைப்படக் கண்காட்சியையும், மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்றார். எனது சார்பாக வாழத்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
2015 நமக்கு நாமே திட்டத்தில் தமிழகத்தில் 234 தொகுதியிலும் நான் அவருன் பயணித்திருக்கின்றேன். பலமுறை தேர்தல் பிரச்சாரத்திற்கும் சென்றிருக்கின்றேன். என் தந்தை இருக்கின்ற புகைப்படங்கள் உள்ளத்திற்கு நெகிழ்ச்சியளிக்கின்றது. இந்தவொரு நெகிழ்ச்சியோடு, அமைச்சர் மூர்த்தி, தருகின்ற உற்சாகத்தோடு திருச்சி மாவட்டத்திலும் இப்புகைப்பட கண்காட்சியை நடத்த ஆசை இதனை, முதலமைச்சர் அவர்களின் கவணத்திற்கு கொண்டு சென்று மிக விரைவில் அதையும் நாங்கள் செய்வோம். நான்கு வாரங்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள் இடைநின்றவர்களாக கருதப்பட்டு அவர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர் பதிவு செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 70 ஆண்டுகால பொதுவாழ்க்கை பயணம் குறித்த பிரமாண்டமான புகைப்பட கண்காட்சியை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , முன்னிலையில் நிதி மற்றும் மனிதவள மோலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *