• Mon. Mar 16th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பேருந்துகளில் போன்பேசத்தடை

ByA.Tamilselvan

Jun 6, 2022

சென்னை மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் சத்தமாக போன் பேசத் தடை விதிக்க தமிழக அரசுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் பரிந்துரை செய்துள்ளது.
பேருந்துகளில் சத்தமாக போன் பேசுவது, பாடல் கேட்பது, கேம் விளையாடுவது போன்றவை சக பயணிகளுக்கு இடையூறாக உள்ளது.எனவே, இவைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என, திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்னுசாமி என்பவர் மனு அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பேருந்துகளில் சத்தமாக போன் பேசுவது, பாடல் கேட்பது, வீடியோ கேம் விளையாடுவது உள்ளிட்டவைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.